இன்ஸ்டன்ட் ஸ்மார்ட்போன் பிரிண்டர்
ஸ்மார்ட்போனில் எடுக்கும் புகைப்படங்களை உடனடியாக பிரிண்ட் போட அறிமுகமாகியுள்ளது இன்ஸ்டன்ட் ஸ்மார்ட்போன் பிரிண்டர்.
இது அவசர உலகம். எல்லாமே துரித கதியில் செயல்பட்டாக வேண்டும். இதனால்தான் இன்ஸ்டன் சமாச்சாரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில் நீங்கள் ஸ்மார்ட்போனில் எடுக்கும் புகைப்படங்களை உடனடியாக பிரிண்ட் போட அறிமுகமாகியுள்ளது இன்ஸ்டன்ட் ஸ்மார்ட்போன் பிரிண்டர். பி.டபிள்யூ. 310001.டி.ஜி. என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது. இது மிகச் சிறிய அளவில் வந்துள்ளதால் மொபைல் போனுடன் இதைக் கையில் எடுத்துச் செல்ல முடியும்.
நீங்கள் கேமராவில் எடுத்த படங்களை இதில் உடனடியாக பிரிண்ட் போடலாம். உங்கள் கேமராதான் இதற்கான இமேஜ் ஸ்கேனர். 30 விநாடிகளில் இதில் புகைப்படம் கிடைக்கும். இந்த பிரிண்டருக்கு இங்க் தேவைப்படாது. இதில் இங்க் தேவைப்படாத காகிதங்களை மட்டும் பயன்படுத்தினால் போதும். ஐ-போனிலும் இயங்கும், அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இது செயல்படும். இதன் உயரமே 48 மி.மீ. ஆகும். அகலம் 7.2 செ.மீ., எடை 163 கிராம் மட்டுமே.