பா.ஜனதா எம்.எல்.ஏ. அனில் கோடே ராஜினாமா முடிவு
பா.ஜனதா எம்.எல்.ஏ. அனில் கோடே பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து உள்ளார். அவர் கட்சியில் இருந்தும் விலகுகிறார்.
மும்பை,
துலே சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அனில் கோடே. இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் பா.ஜனதாவில் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும், கட்சியில் இருந்தும் விலகப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 19-ந் தேதி தொடங்க உள்ளது. அதன் முதல் நாளிலேயே நான் எனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்க உள்ளேன். மேலும் கட்சியில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளேன்.
என்னுடைய எதிர்ப்பையும் மீறி கட்சியின் மூத்த தலைவர்கள் குற்ற பின்னணி கொண்ட சிலரை பா.ஜனதாவில் இணைத்துள்ளனர்.
அவர்கள் துலே மாநகராட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்களின் ஊழல் வழிமுறைகளால் துலே நகரை அழிவு பாதைக்கு கொண்டுசென்று விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அடுத்த மாதம் நடக்கும் துலே மேயர் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும் அவர் கூறினார்.
அனில் கோடே 2009-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்றார். பின்னர் இவர் பா.ஜனதாவுடன் இணைந்து 2014-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்டார்.
இவர் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜனதாவை சேர்ந்த கடோல் தொகுதி எம்.எல்.ஏ. ஆஷிஸ் தேஷ்முக் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். இந்த நிலையில் மற்றொரு எம்.எல்.ஏ.வின் ராஜினாமா முடிவு பா.ஜனதாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.