ரெயில் விபத்துகளில் சிக்கி ஒரே நாளில் 12 பேர் பலி
மும்பையின் உயிர்நாடியாக கருதப்படும் மின்சார ரெயிலில் தினமும் சுமார் 80 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
மும்பை,
கூட்ட நெரிசலால் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுவது, தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதுவது என விபத்துகளில் சிக்கி தினமும் சராசரியாக 9 பேர் பலி ஆகி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி 12 பேர் பலியாகி உள்ளனர்.
தானே, கல்யாண் ரெயில் நிலைய பகுதியில் 3 பேர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்து உள்ளனர். வடலாவில் 2 பேர் பலியானார்கள். மற்றவர்கள் டோம்பிவிலி, மும்பை சென்டிரல், பாந்திரா ஆகிய இடங்களில் பலியாகினர்.
இதேபோல நேற்றுமுன் தினம் ரெயில் விபத்துகளில் சிக்கி 5 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டு உள்ள னர்.