பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட கவுன்சிலர் மகன்
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வானத்தை நோக்கி கவுன்சிலர் ஒருவரின் மகன் துப்பாக்கியால் சுட்டார். இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
தானேயை சேர்ந்த சிவசேனா கவுன்சிலர் சஞ்சய் பாண்டே. இவரது மகன் நீல் பாண்டே. இவர் கடந்த 9-ந்தேதி புனே மாவட்டம் லோனாவாலாவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.
அப்போது, அவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். இதை அங்கிருந்த அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளனர்.
அவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சி தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி லோனாவாலா போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் சுட்டது பற்றி நீல் பாண்டே கூறுகையில், ‘நான் வானத்தை நோக்கி சுட்டது பொம்மை துப்பாக்கியை வைத்து தான். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
எனது நண்பர்கள் வேடிக்கையாக பதிவிட்ட அந்த வீடியோ தற்போது, எனது தந்தையின் அரசியல் செல்வாக்கை குறைப்பதற்காக சதி செய்து வைரலாக்கப்படுகிறது’ என்றார்.