இடைத்தேர்தலில் அ.தி.மு.க. டொபசிட் இழக்கும் - கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி
மக்களின் ஆதரவை இழந்துவிட்டதால் 20 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி என்று ராமநாதபுரத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ கூறினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கடந்த மாதம் 30–ந்தேதி தேவர் குருபூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகளை சேதப்படுத்தியதாக அ.ம.மு.க. நிர்வாகிகள், முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் உள்ளவர்களை நேற்று கருணாஸ் எம்.எல்.ஏ நேரில் செ ன்று சந்தித்து நலம் விசாரித்தார். இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழக அரசு திட்டமிட்டு பொய் வழக்கு பதிவு செய்து கட்சியினரை சிறையில் அடைத்துள்ளனர். ஐகோர்ட்டு பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்று உத்தரவிட் டுள்ளது.
இந்த உத்தரவினை முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் உள்ளிட்டோர் கூட பின்பற்றவில்லை. கோர்ட்டு உத்தரவினை மீறி வைத்த பிளக்ஸ் போர்டுகளை சேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்படி என்றால் கோர்ட்டு உத் தரவினை மீறி பிளக்ஸ் வைத்த அவர்கள் மீது ஏன் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. மற்ற கட்சியினர் பிளக்ஸ் போர்டு வைத்தால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். பசும்பொன்னில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டு களை இந்த ஆட்சியை பிடிக்காத மக்கள்தான் சேதப்படுத்தி உள்ளனர். ஆனால், டி.டி.வி. அணியினரை திட்டமிட்டு கைது செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் மக்கள் விரோத மற்றும் மக்கள் விரும்பாத ஆட்சி நடைபெற்று வரு கிறது. துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டி.டி.வி.தினகரனை துரோகி என்று கூறுகிறார். யார் துரோகி என்று அனைவருக்கும் தெரியும்.
இதற்கு தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். நடைபெற உள்ள 20 தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி. ஆளும் கட்சிக்கு மக்களின் ஆதரவு இல்லாமல் போய்விட்டது.
இடைத்தேர்தல், சட்டமன்ற தேர்தல், பாராளுமன்றதேர்தலில் டி.டி.வி. தினகரனுக்கும், தி.மு.க.விற்கும் தான் நேரடியான போட்டி இருக்குமே தவிர அ.தி.மு.க.வுடன் தேர்தலில் போட்டி என்பதே வராது. 6–ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பாடத்தை நீக்கியது துணை முதல்–அமைச்சர் தான். மணல் கொள்ளை, தங்கம் கடத்தல் அதிகஅளவில் நடைபெற்று வருகிறது. இதற்கு அரசும், ஆட்சியாளர்களும் உடந்தையாக உள்ளனர். என்னிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீசு அனுப்பி என் சீட்டை கிழிக்கலாம் என்று நினைத்தாரோ, அவ ருடை சீட்டை கிழிப்பதற்காக சபாநாயகருக்கே நான் நோட்டீசு அனுப்பினேன். அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை. நான் சிறையில் உள்ள என் அமைப்பை சேர்ந் தவர்களை பார்க்கவே வந்துள்ளேன். இங்கு டி.டி.வி. அணியினர் உள்ளதால் அவர்களையும் பார்த்துள்ளேன். இதற்காக டி.டி.வி. என்னை இயக்குகிறார் என்று கூற முடியாது. நாளைக்கே ஸ்டாலினை கூட போய் பார்ப்பேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அ.ம.மு.க மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், முத்தீசுவரன் ஆகியோர் உடன் இருந்தனர்.