நாமக்கல்லில் வெவ்வேறு விபத்துகளில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் சாவு

நாமக்கல்லில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-11-12 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் போதுப்பட்டியை சேர்ந்தவர் காளிகவுண்டர் (வயது78). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவர் நாமக்கல் உழவர்சந்தையில் காய்கறிகள் வாங்கி கொண்டு, மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

நாமக்கல்-பரமத்தி சாலையில் சென்ற போது எதிரே வந்த அரசு டவுன்பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக இவரது மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த காளி கவுண்டரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி காளிகவுண்டர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து அவரது மகன் விஜயகுமார் (54) கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் பெரியப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (55). இவர் நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறை ஒன்றில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் வேலைக்கு சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

நாமக்கல் வள்ளிபுரம் பைபாஸ் அருகே சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவரது சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்