பிரெஞ்சு போர்வீரர் நினைவிடத்தில் அஞ்சலி

பிரெஞ்சு போர் வீரர் நினைவிடத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி மரியாதை செலுத்தினார்.

Update: 2018-11-11 23:30 GMT

புதுச்சேரி,

முதலாம் உலகப்போர் நடந்து கடந்த 1918–ம் ஆண்டு ஏற்பட்ட உடன்படிக்கையின்படி போர் நிறுத்தப்பட்டது. அதன் நூற்றாண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

அதையொட்டி புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் தேசியகீதங்களை போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் இசைத்தனர்.

தொடர்ந்து போர்வீரர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, ராதாகிருஷ்ணன் எம்.பி., பிரெஞ்சு தூதர் அலெக்சாண்டர் ஜியக்லெர், புதுவை பிரெஞ்சு தூதரக அதிகாரி கேத்ரின், புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி, கவர்னரின் கூடுதல் செயலாளர் சுந்தரேசன் மற்றும் பிரெஞ்சு முன்னாள் ராணுவத்தினர் பலரும் மலர்வளையும் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் பலரும் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். மேலும் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை பார்த்தனர்.

மேலும் செய்திகள்