மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 7 ஆயிரத்து 804 பேர் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 7 ஆயிரத்து 804 பேர் எழுதினர்.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு நடைபெற்றது. தேர்விற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 369 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் நேற்று 7 ஆயிரத்து 804 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
2 ஆயிரத்து 565 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்விற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, அரசு மகளிர் கலை கல்லூரி, அறந்தாங்கி, இலுப்பூர், திருமயம் உள்பட 23 இடங்களில் 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் பறக்கும் படையில் கோட்டாட்சியர் நிலையில் 4 பேரும், தாசில்தார் நிலையில் 12 பேரும், நடமாடும் கண்காணிப்புக் குழுவில் துணை தாசில்தார் நிலையில் 6 பேரும், தேர்வு கூட கண்காணிப் பாளர்கள் என 600-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டனர்.
இந்த தேர்வு அனைத்தும் முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெற்ற புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி, டி.இ.எல்.சி. மேல்நிலைப்பள்ளி, மன்னர் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களை கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது விடைத் தாள்களை கருவூலத்தில் வைத்து பாதுகாப்பாக அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் கணேஷ் அறிவுறுத்தினார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர்கள் டெய்சிகுமார், ஜெயபாரதி உள்பட பலர் உடன் இருந்தனர்.