மக்களின் நம்பிக்கையை சி.பி.ஐ. இழந்து விட்டது காதர்மொய்தீன் பேட்டி
மக்களின் நம்பிக்கையை சி.பி.ஐ. இழந்து விட்டது என காதர்மொய்தீன் கூறினார்.
அய்யம்பேட்டை,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டைக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க.வினர் எதிர்க்கட்சியினரை பார்த்து வணக்கம் கூட சொல்லக்கூடாது என்ற நிலை இருந்தது. இப்போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொள்கிறார்கள். தமிழகத்தில் அரசியல் நாகரீகம் வளர்ந்து வருகிறது. ஒரு கட்சியை சேர்ந்தவர், மற்றொரு கட்சியை சேர்ந்தவருடன் பேசினாலே கூட்டணி அமைக்க போகிறார்கள் என்பது அபத்தமான பேச்சு.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக மயிலாடுதுறை, மத்திய சென்னை, வேலூர், ராமநாதபுரம், பெரியகுளம் ஆகிய தொகுதிகளை கண்டறிந்துள்ளோம். கூட்டணி கட்சிகளுடன் பேசிய பின்னர் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்வோம்.
சி.பி.ஐ. அமைப்பு சுயேச்சையான அமைப்பாக செயல்பட வேண்டும். அந்த அமைப்பில் மத்திய அரசு தலையிட்டு அதிகாரிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியதால் மக்களின் நம்பிக்கையை சி.பி.ஐ. இழந்து விட்டது. மத்திய அரசின் தவறான கொள்கைகளால் தொழில்கள் மந்த நிலையில் உள்ளன.
மத்திய அரசு மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தாமல் மதரீதியான மோதல்களை உருவாக்குவதில் குறியாக உள்ளது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. இந்தியாவில் ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு நம்பிக்கை உண்டு.
இதில் மாற்றங்கள் கொண்டு வரும்போது அந்தந்த மதத்தை சேர்ந்தவர்களிடம் கேட்டு முடிவு செய்ய வேண்டும். முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு வருகிற ஜனவரி மாதம் மதுரையில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், மாநில செயலாளர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் அப்துல் காசிம் ராஜாஜி, ஜமாத் சபை தலைவர் முகமது நஜீப் ஆகியோர் உடன் இருந்தனர்.