ஆந்திராவில் இருந்து குமரிக்கு 2,600 டன் பச்சரிசி மூடைகள் வந்தன
ஆந்திராவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 2,600 டன் பச்சரிசி மூடைகள் வந்தன.
நாகர்கோவில்,
மத்திய அரசு சார்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படுவது வழக்கம். இதே போல் ஆந்திரா மாநிலத்தில் இருந்து 2,600 டன் பச்சரிசி மூடைகள் நேற்று குமரி மாவட்டத்துக்கு சரக்கு ரெயில் மூலம் கொண்டுவரப்பட்டன.
இந்த சரக்கு ரெயில் நேற்று மதியம் 12 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து ரெயிலை யார்டு பகுதியில் நிறுத்தி அரிசி மூடைகளை இறக்கும் பணிகள் நடந்தது. இதற்காக 50-க்கும் மேற்பட்ட லாரிகள் ரெயில் நிலைய சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
பள்ளிவிளை குடோன்
பின்னர் இந்த அரிசி மூடைகள் தொழிலாளர்கள் மூலமாக லாரிகளில் ஏற்றப்பட்டு பள்ளிவிளையில் உள்ள அரிசி குடோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு அனைத்து அரிசி மூடைகளும் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டன.