ஆன்லைனில் ரூ.9 ஆயிரத்துக்கு வாங்கிய கேமரா நொறுங்கி இருந்ததால் கூரியர் ஊழியருடன் வாக்குவாதம்
ஆன்லைனில் ரூ.9 ஆயிரத்துக்கு வாங்கிய கேமரா நொறுங்கி இருந்ததால் கூரியர் ஊழியருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசம் செய்து வைத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
அன்னவாசல்,
தற்போது நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவது குறைந்து வருகிறது. தற்போது செல்போன்கள், டி.வி.க்கள், கேமராக்கள் போன்றவை ஆன்லைன் மூலமே நடைபெறுகின்றன. ஆன்லைன் வர்த்தகத்தில் விலை குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை சேர்ந்த வியாபாரியான பரமசிவம் ஆன்லைன் மூலம் தனது கடைக்கு ரூ.9 ஆயிரத்திற்கு கேமரா உள்பட பல பொருட்களை கடந்த வாரம் ஒரு நிறுவனத்திடம் புக் செய்து இருந்தார்.
அவர் கேட்ட பொருட்கள் ஒரு கூரியர் நிறுவனம் மூலம் நேற்று பரமசிவத்துக்கு டெலிவரி செய்யப்பட்டது. பணம் முழுவதையும் செலுத்திவிட்டு பார்சலை வாங்கி பிரித்து பார்த்தபோது உள்ளே இருந்த அனைத்து பொருட்களும் நொறுங்கி இருந்தன.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பரமசிவம், இது குறித்து பார்சலை டெலிவரி செய்த கூரியர் நிறுவன ஊழியரிடம், இந்த பொருட்கள் அனைத்தும் உடைந்து உள்ளது. எனக்கு இந்த பொருள் வேண்டாம் எனது பணத்தை திரும்ப கொடு என கூறினார். அதற்கு அந்த ஊழியர் டெலிவரி செய்வது மட்டுமே எனது பணி. பொருட்களை மீண்டும் அனுப்புவதாக இருந்தால், நீங்கள் மீண்டும் ஆன்லைனில் தான் புக் செய்ய வேண்டும் என்றார்.
இதனால், 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரையும் அந்த பகுதியில் உள்ளவர்கள் அன்னவாசல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்கள் இருவரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது டெலிவரி செய்த ஊழியர், 5 நாளில் சம்பந்தப்பட்ட கம்பெனி மூலம் பணம் கிடைப்பதற்கு உண்டான உதவியை செய்து தருவதாக கூறினார்.
இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.