சப்–இன்ஸ்பெக்டரை அறையில் பூட்டி தப்பிய குற்றவாளிகள் பெண் போலீஸ் விரட்டி பிடித்தார்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்த பீகார் மாநிலத்தவர் அவதேஷ்ராய் (வயது 31), முந்த்ரா குமார் (18) ஆகிய இருவரையும் பெரியமேடு போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்தில் உட்கார வைத்தனர்.

Update: 2018-11-05 22:45 GMT
சென்னை, 

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்த பீகார் மாநிலத்தவர் அவதேஷ்ராய் (வயது 31), முந்த்ரா குமார் (18) ஆகிய இருவரையும் பெரியமேடு போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்தில் உட்கார வைத்தனர். அப்போது அந்த நபர்கள் இருவரும் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அப்போது போலீஸ் நிலையத்துக்கு வந்த வேதநாயகி என்ற பெண் போலீஸ் ஏட்டு இருவரையும் விரட்டிச்சென்று, மடக்கிப்பிடித்தார்.

பின்னர் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பெண் போலீஸ் ஏட்டு வேதநாயகி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, போலீஸ்காரர் கிருஷ்ணராஜ் ஆகியோரை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும் செய்திகள்