கவர்னர் மாளிகையில் பூமிக்கடியில் புதைந்திருந்த ஆங்கிலேயர் கால 2 பீரங்கிகள் மீட்பு

மும்பை கவர்னர் மாளிகையில் மண்ணுக்குள் புதைந்து இருந்த ஆங்கிலேயர் காலத்து 2 பீரங்கிகள் கிரேன் மூலம் மீட்கப்பட்டன.

Update: 2018-11-04 23:23 GMT
மும்பை,

மும்பை மலபார்ஹில்லில் உள்ள மராட்டிய கவர்னர் மாளிகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மரக்கன்று நடும் நிகழ்ச்சிக்காக நிலத்தை தோண்டும் பணி நடந்தது. அப்போது, பூமிக்கடியில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 2 பீரங்கிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பீரங்கிகளை வெளியே எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி நேற்று முன்தினம் அந்த பீரங்கிகள் இரண்டும் கிரேன் மூலம் மண்ணுக்குள் இருந்து வெளியே மீட்கப்பட்டன.

இரண்டு பீரங்கிகளும் தலா 22 டன் எடை கொண்டவையாக இருந்தன. மேலும் 4.7 மீட்டர் நீளமும், 1.15 மீட்டர் விட்டமும் கொண்டதாக இருந்தன.

அந்த பீரங்கிகளை சுத்தப்படுத்தி கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள ஜல் விகார் அரங்கத்தின் முன்னால் நிறுவ அதிகாரிகளுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் அந்த பீரங்கிகள் தொடர்பான தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அறிந்து கொள்வதற்கு கடற்படையை அணுகும்படியும் அவர் அதிகாரிகளை கேட்டு கொண்டார்.

மேலும் செய்திகள்