போலீசார் தாக்கியதில் மீனவர் இறந்ததாக புகார்: மணவாளக்குறிச்சியில் மாஜிஸ்திரேட்டு விசாரணை
மணவாளக்குறிச்சி அருகே போலீசார் தாக்கியதில் மீனவர் இறந்ததாக புகார் கூறப்பட்டது குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பின்பு மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணவாளக்குறிச்சி,
மணவாளக்குறிச்சி அருகே முட்டத்தை சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 49), மீனவர். இவரும், வேறு சில மீனவர்களும் சேர்ந்து நேற்று முன்தினம் திருநைனார்குறிச்சியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் பொது இடத்தில் மது குடிக்கலாமா? என்று கேட்டு அவர்களை திடீரென தாக்கியதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் சகாயராஜ் மயங்கி விழுந்தார். அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சகாயராஜ் பரிதாபமாக இறந்தார்.
அவர் இறந்த தகவல் அறிந்ததும் முட்டம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் சகாயராஜை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த வழியாக சென்ற 5 அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் இரவு வெகுநேரம் வரை நீடித்தது. இதனால், அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு நாகர்கோவில் மாஜிஸ்திரேட்டு கிறிஸ்டியன் மணவாளக்குறிச்சிக்கு சென்று விசாரணை நடத்தினார். அவரை, சகாயராஜின் மனைவி பிரேமி சந்தித்து புகார் கொடுத்தார். அந்த புகாரில் போலீசார் தாக்கியதில் தனது கணவர் இறந்ததாகவும், அவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அப்போது, பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான் உண்மை நிலவரம் தெரிய வரும் என்றும், அதன் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாஜிஸ்திரேட்டு உறுதி அளித்தார். இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட அரசு பஸ்கள் விடுவிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சகாயராஜின் உடல் நேற்று மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையொட்டி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான உறவினர்கள் குவிந்திருந்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்பு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
ஆனால், பிரேத பரிசோதனை முடிவை எழுத்து பூர்வமாக தர வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உடலை வாங்க மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு உறவினர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதையடுத்து சகாயராஜ் உடல் பிணவறையில் வைக்கப்பட்டது.
மீனவர் இறந்த சம்பவத்தால் முட்டம் பகுதியில் பதற்றம் நீடித்தது. இதனால், நேற்று 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.