தன்னம்பிக்கை அழகி

பெண்களுக்கான சர்வதேச அழகுப்போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அழகுடன் அவர்களின் தனித்திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளை நடத்துகிறார்கள்.

Update: 2018-11-04 07:54 GMT
பெண்களுக்கான சர்வதேச அழகுப்போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அழகுடன் அவர்களின் தனித்திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளை நடத்துகிறார்கள். அந்த வகையில் காது கேளாதவர்களுக்காக நடத்தப்பட்ட அழகுப் போட்டியில் அரியானா மாநிலம் பானிபட் பகுதியை சேர்ந்த நிஷ்தா டுஜேதா ‘மிஸ் ஆசியா’ பட்டம் வென்றிருக்கிறார். இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் இவர்தான். செக் குடியரசில் நடந்த இந்த அழகு போட்டியில் ஏராளமான நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டார்கள். அதனால் கடும்போட்டி நிலவியது. அதில் தனது தனித்திறமைகளை வெளிப்படுத்தி நிஷ்தா வென்றிருக்கிறார்.

நிஷ்தா பிறவியிலேயே காது கேட்கும் தன்மையை இழந்தவர். இவரால் பேச முடியாது. டெல்லியில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்தவர். தற்போது மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்படிப்பு படித்து வருகிறார். ஏற்கனவே இவர் காதுகேளாதோருக்கான மிஸ் இந்தியா பட்டத்தை வென்றிருக்கிறார்.

‘‘என் பெற்றோர் எப்போதும் உதவிகரமாக இருக்கிறார்கள். எனக்கு கிடைக்கும் பரிசு பணத்தை ஏழை மக்களுக்கு செல வழிக்க விரும்புகிறேன். பொதுமக்கள் எங்களிடத்தில் பரிதாபம் கொள்ள தேவையில்லை. எங்களது திறமைகளை நிரூபிக்க சம வாய்ப்புகள் கிடைத்தால் போதும்’’ என்று சைகை மொழியில் தனது தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

மேலும் செய்திகள்