மீன் பண்ணை குளங்கள் அமைக்க மானியம் - கலெக்டர் கதிரவன் தகவல்
மீன் பண்ணை குளங்கள் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு மீன் வளத்துறை சார்பில், மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
அதன்படி ஒரு ஹெக்டேர் பரப்பளவில் புதிய மீன் பண்ணை குளங்கள் மற்றும் குட்டைகள் அமைக்க செலவில் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். ஏற்கனவே உள்ள மீன் வளர்ப்பு குளங்கள், தொட்டிகளை சீரமைக்க ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மானியம் கிடைக்கும்.
நன்னீர் மீன்வளர்ப்பு இடுபொருட்களுக்கு ஆகும் செலவினத்தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் 40 விழுக்காடு அல்லது ரூ.60 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். மானியம் வேண்டி ஏராளமான விவசாயிகள் விண்ணப்பித்தால், முன்னுரிமை மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே விருப்பம் உள்ள விவசாயிகள், மீன்வளர்ப்போர் இந்த செய்தி வெளிவந்த 30 நாட்களுக்குள் மாவட்ட மீன்வள துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு ஈரோடு மீன்வள உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.