மணவாளக்குறிச்சி அருகே பதற்றம் போலீசார் தாக்கியதில் மீனவர் சாவு? 5 பஸ்களை சிறைபிடித்து போராட்டம்
மணவாளக்குறிச்சி அருகே போலீசார் தாக்கியதில் மீனவர் இறந்ததாக கூறி முட்டம் கிராம மீனவர்கள் 5 பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
மணவாளக்குறிச்சி,
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே திருநைனார்குறிச்சியில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று மதியம் 1 மணிக்கு முட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் அந்த கடையில் மதுபாட்டில்களை வாங்கினர். அங்கு பார் கிடையாது. இதனால் மீனவர்கள் டாஸ்மாக் கடை அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மணவாளக்குறிச்சி போலீசார் ரோந்து வந்தனர். இதனை கவனித்த போலீசார், பொது இடத்தில் மது குடிக்கலாமா என்று கேட்டு அவர்களை திடீரென தாக்கியதாக தெரிகிறது. பின்னர் 6 மீனவர்களை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே போலீசார் வாகனத்தில் ஏற்றிய 6 பேரையும் கீழே இறக்கி விட்டனர். அந்த சமயத்தில் சகாயராஜ் (வயது 49) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
சகாயராஜ் இறந்த சம்பவம் முட்டம் கிராம மீனவர்களுக்கு தெரியவந்தது. போலீசார் தாக்கியதால் தான் சகாயராஜ் இறந்ததாக மீனவர்களிடையே தகவல் பரவியது. ஆத்திரமடைந்த அவர்கள் அங்குள்ள ஆலயம் முன்பு திரண்டனர். சகாயராஜ் சாவுக்கு காரணமான போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்போது அந்த வழியாக வந்த 5 அரசு பஸ்களை சிறைபிடித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கூறுகையில், டாஸ்மாக் கடை அருகே முட்டம் மீனவர்கள் சிலரை போலீசார் தாக்கியுள்ளனர். தாக்கிய சில நிமிடங்களில் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்த போது அவர் உயிரிழந்துள்ளார். அவருடைய சாவுக்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை சகாயராஜ் உடலை வாங்க மாட்டோம். போலீசார் மீது நடவடிக்கை எடுத்தால் தான் சிறைபிடித்த பஸ்களை விடுவிப்போம் என்று தெரிவித்தனர்.
மாலை 6 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 11 மணிக்கு மேலும் நீடித்தது. ஆனால் அதுவரை எந்தவொரு அதிகாரிகளோ, போலீசாரோ சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இது மீனவர்களிடையே மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.