திருச்சியில் ‘தேசம் காப்போம்’ மாநாடு: ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு திருமாவளவன் பேட்டி
திருச்சியில் நடைபெறும் ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் பங்கேற்க ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
திருச்சி,
திருச்சியில் டிசம்பர் 10-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘ தேசம் காப்போம்‘ மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க அறைகூவல் விடுக்கும் மாநாடாக அமையும். இதில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் பங்கேற்கின்றன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். தேசத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது. பா.ஜ.க. ஆட்சி மீண்டும் வந்து விடக்கூடாது. இத்தகைய சூழ்நிலையில் ராகுல்காந்தியுடன் ஆந்திர முதல் -மந்திரி சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி இருப்பது வரவேற்கத்தக்கது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொண்டுள்ளோம். தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளது. மற்ற தோழமை கட்சிகளும் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது.
ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த மத்திய பா.ஜனதா அரசு அதற்கு நேர்மாறாக ரூ.3 ஆயிரம் கோடியில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைத்திருப்பது ஏழை மக்களை அவமதிக்கும் செயல். தற்போது அயோத்தியில் மீண்டும் 100 அடியில் ராமர்சிலை வைப்பதாக கூறி உள்ளார்கள். சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைத்து காந்தியின் புகழை மறைக்கும் பா.ஜனதா அரசை அகற்ற மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.