மத்திய அரசு தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் தம்பிதுரை பேட்டி

மத்திய அரசு, தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.;

Update: 2018-11-03 22:45 GMT
கோவை,
நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கோவை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திட்டங்களை செயல்படுத்துவது மாநில அரசுகள் தான். தமிழகத்தில் இருந்து தான் அதிக வரிப்பணம் மத்திய அரசுக்கு செல்கிறது. எனவே தமிழக திட்டங்களுக்காக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை.

ஒரு கிராமத்தை தத்தெடுத்தால் மற்ற கிராம மக்களிடையே எதிர்ப்பை சந்திக்க நேரிடும். எனவே அனைத்து கிராமத்தையும் தத்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் ஏற்று கொள்வார்கள். எனவே நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை ரூ.5 கோடியில் இருந்து ரூ.25 கோடியாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதை நிறைவேற்றவில்லை.

மத்திய அரசுதான் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவது போலவும் மாநில அரசு எதுவும் செய்யவில்லை என்பது போன்ற கற்பனையான கருத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது வருந்தத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்