தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் ரத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்கப்படுகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு ஊழியர்கள், தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு தீபாவளி போனஸ் மற்றும் முன்பணம் வழங்கி உள்ளார். இந்த அரசு எப்போதும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாகவே விளங்கும்.
நடிகர் கமல்ஹாசன் அரசியல் அரிச்சுவடே தெரியாமல் அரசியலுக்கு வர நினைப்பது சிறந்தது அல்ல. அவர் அவசரப்படாமல் அரசியல் அமைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். கூட்டுறவு சங்கம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது மட்டுமே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பீதியை கிளப்ப வேண்டாம்
பக்கத்து மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் எந்த தொற்று நோய்களும் பரவலாக இல்லை. பருவகால மாறுபாடுகளால் ஏற்படும் நோய்களை தடுக்கும் வகையில், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், இயக்குனர்கள் மாநிலம் முழுவதும் ஆய்வுப்பணி நடத்தி கண்காணித்து வருகின்றனர். டெங்கு கொசு ஒழிப்பு பணி, மாநிலம் முழுவதும் முடுக்கி விடப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் சுகாதார பணியாளர்கள் 460 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 1,360 பேரும் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் யாருக்கும் இல்லை. தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கலாம். ஆனால் மக்களை அச்சப்படுத்தி, பீதியை கிளப்ப நினைக்க கூடாது.
உரிமம் ரத்து
25 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டர்களில் கட்டணம் முறைப்படுத்தப்பட்டு உள்ளது. தியேட்டர்களில் குறைந்தபட்சம் ரூ.80 முதல் அதிகபட்சமாக ரூ.120 வரையிலும் வசூலிக்கலாம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெரிய நடிகர்களின் படங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
அதேபோன்று விழாக்காலங்களில் பெரிய நடிகர்களின் படம் வெளியாவதால், குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் வெளியிட முடியாத நிலை உள்ளது.
இதனால் சினிமாத்துறை நலிவடைந்து வருகிறது. இதற்கு அரசு தீர்வு காணும். இதற்கு முன்னணி நடிகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தியேட்டர்களில் குளிர்பானம், உணவுப்பொருட்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அதனை வரைமுறைப்படுத்த விரைவில் சட்டம் இயற்றப்படும். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.