மனைவியை கொல்ல முயன்றவருக்கு 5 ஆண்டு ஜெயில் : செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை கொல்ல முயன்றவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து புனே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-11-01 23:22 GMT
மும்பை,

மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவர் அகமது ராஜா (வயது42). இவரது மனைவி ஹூமா. கணவர், மனைவி இருவரும் சிறு, சிறு பிரச்சினைகளுக்காக அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். இதில் மனைவியை அகமது ராஜா அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த ஹூமா கணவரிடம் கோபித்து கொண்டு புனேயில் உள்ள தனது சகோதரர் செய்யதுவின் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில், 2013-ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி அகமது ராஜா புனே சென்று மனைவியை சமாதானப்படுத்தி தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு ஹூமா மறுத்து விட்டார்.

இதில் கோபம் அடைந்த அகமது ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்தினார். இதை தடுக்க முயன்ற செய்யதுவுக்கும் கத்திக்குத்து விழுந்தது. காயம் அடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமானார்கள்.

இதற்கிடையே சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அகமது ராஜாவை கைது செய்தனர். மேலும் அவர் மீது புனே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பு கூறிய செசன்ஸ் கோர்ட்டு, அகமது ராஜாவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்