58 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த நாள் முதல் நட்பை வளர்த்து வரும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள்
58 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் பணியில் சேர்ந்து, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் தங்களுடைய நட்பை வளர்த்து வருகின்றனர். முதுமையிலும் ஓராண்டு இடைவெளியில் அவர்கள் சென்னையில் நேற்று சந்தித்தனர்.;
சென்னை,
தமிழக போலீஸ்துறையில் 1961-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு சேர்ந்த 50 பேர் டி.ஐ.ஜி., எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., துணை கமிஷனர் போன்ற உயரிய பதவிகளை அலங்கரித்து ஓய்வு பெற்றனர். இதில் நல்லம்மநாயுடு, ஆஸ்டின், ராஜகோபால், சங்கரமூர்த்தி, எம்.ஏ.எமீல் போன்ற அதிகாரிகள் அடங்குவர்.
1960-ம் ஆண்டு இவர்கள் போலீஸ் பயிற்சி பெற்ற போது நல்ல நண்பர்களாக அறிமுகமாகி உள்ளனர். தற்போது பணி நிறைவு பெற்றாலும், இவர்களுடைய நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பழைய மாணவர்கள் மீண்டும் சந்தித்து பசுமையான நினைவுகளை அசைப் போடுவது போன்று, இவர்களும் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து மகிழ்ச்சியுடன் கலந்துரையாடி வருகின்றனர்.
அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் அதிகாரிகள் கேண்டீனில் நேற்று சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
1961-ம் ஆண்டு செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியை தொடங்கி சென்னை நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனராக கடந்த 1998-ம் ஆண்டு ஓய்வு பெற்ற சங்கரமூர்த்தி (வயது 78) இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.
இதுகுறித்து அவர் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:- வேலூரில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் கடந்த 1960-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி நாங்கள் 50 பேர் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சிக்கு சேர்ந்தோம். அப்போது நாங்கள் நண்பர்களாக அறிமுகம் ஆகினோம். ஓராண்டு பயிற்சிக்கு பின்னர் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம்.
1961-ம் ஆண்டு தமிழகத்தில் 45 பேருக்கும், புதுச்சேரியில் 5 பேருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் பணி ஒதுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் வெவ்வேறு மாவட்டத்தில் பணியாற்றினாலும், எங்களுடைய நட்பை மட்டும் கைவிடவில்லை.
கடந்த 1986-ம் ஆண்டு எங்களுடைய நட்புக்கு 25 வயது ஆனது. இதனை வெள்ளி விழாவாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வி.ஜி.பி. பூங்காவில் சிறப்பாக கொண்டாடினோம்.
1992-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நாங்கள் ஒவ்வொருவராக பணியில் இருந்து ஓய்வு பெற்றோம். எனினும் நாங்கள் எங்களுடைய நட்புக்கு மட்டும் ஓய்வு கொடுக்கவில்லை. அனைவரும் வெவ்வேறு ஊர்களில் இருந்தாலும், தொலைபேசி வாயிலாக நட்பை தொடர்ந்து வருகிறோம்.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் பணிக்கு சேர்ந்த நாளான நவம்பர் 1-ந்தேதி அன்று ஒரு இடத்தில் ஒன்றாக கூடி சந்தித்து வருகிறோம். இலங்கைக்கு சுற்றுலாவும் சென்று இருக்கிறோம். கடந்த 2011-ம் வருடம் 50-ம் ஆண்டு பொன்விழா சந்திப்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினோம்.
வயது முதிர்வு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சந்திப்பு நிகழ்ச்சியை சென்னையிலேயே நடத்தி வருகிறோம். தற்போது எங்கள் நட்புக்கு 58 வயதாகி உள்ளது. எங்கள் நட்புக்குழுவில் உள்ள எம்.ஏ.எமீல் புதுச்சேரியில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி, மத்திய உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாக பதவியில் ஓய்வு பெற்றிருக்கிறார்.
50 பேருடன் தொடங்கிய எங்களுடைய நட்பு பயணத்தில் தற்போது 26 பேர் பயணிக்கிறோம். இதில் 10 பேர் 80 வயதை கடந்து விட்டார்கள். 10 பேருக்கு 80 வயது நடக்கிறது. இன்றைய சந்திப்பில் 17 பேர் தங்களது மனைவியுடன் பங்கேற்றனர். 9 பேர் வரவில்லை. 24 பேர் தற்போது உயிருடன் இல்லை. எனினும் அவர்களுடைய குடும்பத்தினருடன் நாங்கள் நட்புறவை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
அன்றைய காலக்கட்ட போலீஸ் பணி குறித்து, நெல்லை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியை தொடங்கி சென்னை ஐகோர்ட்டு விஜிலென்ஸ் ஏ.டி.எஸ்.பி.யாக பணி நிறைவு பெற்ற ஆஸ்டின்(79) நினைவுக்கூர்ந்து பேசியதாவது:-
1960-ம் ஆண்டு காலக்கட்டத்தில் போலீஸ் தேர்வு என்பது மிகவும் கடுமையாகவும், சவாலாகவும் இருக்கும்.
காக்கி அரைக்கால் டவுசருடன் தலையில் தொப்பி அணிந்து சைக்கிளில் ரோந்து சென்றால், சாலையில் செல்பவர்கள் அனைவரும் கையெடுத்து கும்பிடுவார்கள். ‘சல்யூட்’ அடிப்பார்கள்.
அந்தளவுக்கு போலீஸ் சீருடையில் நாங்கள் மிடுக்குடன், கம்பீரமாக இருப்போம். ஒரு வீட்டில் திருட்டு நடந்தாலோ, கொலை நடந்தாலோ, அது எங்கள் வீட்டில் நடந்தது போன்று உணர்ந்து குற்றவாளிகளை பிடிக்க மெனக்கெடுவோம். திருட்டு குற்றச்சம்பவங்களில் 3 நாட்களுக்குள் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் இருக்கும்.
தற்போது சி.சி.டி.வி. கேமரா, தொழில்நுட்ப வசதிகள் மூலம் குற்றவாளிகள் உடனடியாக சிக்குகிறார்கள். அந்த காலக்கட்டத்தில் அத்தகைய வசதிகள் இல்லாத போதும், நாங்கள் இரவு, பகல் பாராமல் துணிச்சலாக துப்பு துலக்கி குற்றவாளிகளை தேடி கண்டுபிடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஒவ்வொருவர் வீட்டிலும் கடந்த ஓராண்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், சம்பவங்கள் குறித்து அனைவரும் மனம் விட்டு பேசினர்.
உடலுக்கு வயதாகினாலும், மனதுக்கு வயதாகவில்லை என்பது போல அனைவரும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு, பிரியா விடை பெற்றனர்.