கும்மிடிப்பூண்டி பஜாரில் செல்போன் கடையில் திருட முயன்ற வழக்கில் வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி பஜாரில் செல்போன் கடையில் திருட முயன்ற வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள பிரபல செல்போன் கடை ஒன்றின் பூட்டு கடந்த மாதம் 13-ந் தேதி உடைக்கப்பட்டது. அங்கு உள்ள அலாரம் ஒலித்ததை தொடர்ந்து பூட்டை உடைத்த மர்ம நபர் தனது திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் மேற்கண்ட செல்போன் கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சித்தவர் கும்மிடிப்பூண்டி சிந்தைனையாளர் தெருவை சேர்ந்த ஜனார்தனம் (வயது 29) என்பது தெரியவந்தது. அவரை கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.