நெல்லை–தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த 20 மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி கலெக்டர் ஷில்பா வழங்கினார்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த 20 மாணவ–மாணவிகளுக்கு ‘தினத்தந்தி‘யின் கல்வி நிதியை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

Update: 2018-11-01 22:00 GMT
நெல்லை, 

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த 20 மாணவ–மாணவிகளுக்கு ‘தினத்தந்தி‘யின் கல்வி நிதியை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

கல்வி நிதி 

கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் ‘தினத்தந்தி‘ சார்பில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ–மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வந்தது. மேலும், மாணவர் பரிசு திட்டத்தின்படி மாவட்டம் தோறும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுதேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ–மாணவிகள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு மற்றும் ‘தினத்தந்தி’யின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

2014–2015–ம் கல்வி ஆண்டில் இருந்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் மேல்படிப்பினை தொடர்வதற்கு வசதியாக ‘தினத்தந்தி‘ கல்வி நிதி திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

கல்வி நிதி ரூ.34 லட்சம் 

இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்துக்கு தலா 10 மாணவர்கள் வீதம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 34 மாவட்டங்களை சேர்ந்த 340 மாணவ–மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

4–வது ஆண்டாக 2017–2018–ம் கல்வி ஆண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ–மாணவிகளுக்கு ‘தினத்தந்தி’ கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சிகள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி நெல்லை– தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2017–2018–ம் கல்வி ஆண்டில் ‘தினத்தந்தி‘ கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள 20 மாணவ–மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:–

நெல்லை மாவட்டம் 

1. க.கவுசல்யா, மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, நெல்லை டவுன், கல்லணை.

2. மா.விஜயலட்சுமி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புளியங்குடி

3. த.சங்கீதா, ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் உயர்நிலைப்பள்ளி, திசையன்விளை

4. சு.தமிழரசி, அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளாங்குழி

5. சு.சாந்தினி, செய்யது உறைவிடப்பள்ளி, குற்றாலம்.

6. ம.அபிஸ்ர லட்சுமி, அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி, விக்கிரமசிங்கபுரம்.

7. கா.கயல்விழி, இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி, அரியநாயகிபுரம்.

8. ஐ.எரின், பாலகிருஷ்ணா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, வடக்கன்குளம்.

9. செ.ஹலிமாரஸ்பியா, கே.ஏ.எம்.பி.மீரானியா மேல்நிலைப்பள்ளி, களக்காடு.

10. சா.நித்திஸ்குமார், நாலந்தா பள்ளி, வள்ளியூர்.

தூத்துக்குடி மாவட்டம் 

11. ப.சூரியநாராயணன், ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவைகுண்டம்.

12. மு.தனவித்யா, புனித தோமையார் மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டியன்பட்டினம்,

13. சு.சோகிஸ்யா சோஜல், தூய யோவான் மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாசரேத்,

14. பெ.மகாலட்சுமி, தூய மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாயர்புரம்.

15. ம.பிரியதரிசினி, டி.என்.டி.டி.ஏ. புலமாடன்செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி, சாத்தான்குளம்.

16. மா.ராஜேசுவரி, அரசு மேல்நிலைப்பள்ளி, ஏரல்.

17. சே.பிரின்ஸ், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, பொத்தகாலன்விளை.

18. கா.பிரமசக்தி, திருசிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.

19. ல.சுகந்தி, செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர்.

20. ஆ.ஜோதி, செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர்.

நிதி வழங்கும் விழா 

இந்த 20 மாணவ–மாணவிகளுக்கும் ‘தினத்தந்தி‘ கல்வி நிதி வழங்கும் விழா நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலையில் நடந்தது.

விழாவுக்கு நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷிவ்பா தலைமை தாங்கி 20 மாணவ–மாணவிகளுக்கு கல்வி நிதியை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

 உடல் நலனில் அக்கறை காட்டுங்கள் 

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவ–மாணவிகளுக்கு ‘தினத்தந்தி’ நிறுவனத்தின் சார்பில் கல்வி நிதி வழங்குவது பாராட்டுக்குரியதாகும். இந்த நிதியை பெறுகின்ற மாணவ–மாணவிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பள்ளிக்கூடத்திற்கு நான் ஏற்கனவே வந்து உள்ளேள். அப்போது நான் மாணவிகளாகிய உங்களுக்கு உங்களின் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள் என்று கூறினேன். அதேபோல் நீங்கள், உடல்நலனில் அக்கறை காட்டுகிறீர்களா? உங்களுடைய ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை நடத்தினீர்களா? உடனே சோதனை நடத்தி சரியான அளவில் வைத்துக்கொள்ளவேண்டும். இந்த வயதுடைய மாணவிகள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவேண்டும்.

இந்த பள்ளிக்கூடத்தில் 4 ஆயிரத்து 300 மாணவிகள் படிக்கிறார்கள். அவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்றால் உங்களுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு மாணவியிடமும், ஒவ்வொரு திறமைகள் இருக்கும். அந்த திறமைகளை வெளிகொண்டு வர நீங்கள் கடினமாக உழைக்கவேண்டும். நாம் மற்ற மாணவிகளுடன் போட்டிப்போடக்கூடாது. உங்களிடமே நீங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடையவேண்டும். ஒவ்வொரு நாளும் நான் வளர்ச்சி அடைந்து வருகிறேன் என்ற எண்ணத்துடன் இருக்கவேண்டும். அந்த வளர்ச்சியை அடைய தினமும் முயற்சி செய்யவேண்டும்.

ஆளுமைத்திறனை வளர்க்க வேண்டும் 

மாணவிகள் வாழ்க்கையில் சாதனை படைக்க திட்டமிட்டு, விடாமுயற்சியுடன் கடினமாக படிக்கவேண்டும். அப்போது தான் உங்களால் வாழ்க்கையில் சாதனை படைக்கமுடியும். மாணவிகள் தங்களுடைய ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும். நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் சாதிக்கவேண்டும். உங்களுடைய முன்னேற்றத்திற்கு நீங்கள் தான் காரணம், மற்றவர்களை குறை கூறமுடியாது. ஒரு மாணவி பேசுவதில் சிறந்தவராகவும், மற்றொருவர் விளையாட்டில் சிறந்தவராகவும், இன்னொருவர் படிப்பில் சிறந்தவராகவும் சிறந்தவராகவும் இருப்பார். அவரவர் திறமையில் சிறந்து விளங்கவேண்டும். அப்போதுதான் இந்த போட்டி நிறைந்த உலகத்தில் நம்மால் சாதிக்கமுடியும். இந்த சாதனையை இந்த வயதில்தான் செய்யமுடியும். எனவே, மாணவிகளாகிய நீங்கள் உங்களுடைய துறையில் சாதனை படைக்கவேண்டும்.

மேலும், நீங்கள் பெரிய கனவு காணவேண்டும். அதுவும் நீண்ட கால கனவாக இருக்கவேண்டும். அந்த கனவு நிறைவேற நீங்கள் கடுமையாக உழைக்கவேண்டும். ஒழுக்கத்துடனும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ளவேண்டும். கல்வியில் சாதனை படைக்க உங்களை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நெல்லை ‘தினத்தந்தி‘ மேலாளர் த.ஜனார்த்தனன் வரவேற்றுப் பேசினார். முடிவில் தலைமை ஆசிரியை நாச்சியார் என்ற ஆனந்த பைரவி நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆசிரியைகள் மலர்விழி, தெய்வராணி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

விழாவில் செய்தி–மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், நெல்லை தாசில்தார் ஆவுடைநாயகம், வருவாய் ஆய்வாளர் அருணாசலம், நெல்லை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்