திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்; 3 பேர் கைது

பேரம்பாக்கம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-31 21:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீசார் நேற்று முன்தினம் பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஓரு மினிடெம்போவை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த டிரைவரான காஞ்சீபுரம் மாவட்டம் சிவபுரம் காலனியை சேர்ந்த தமிழ்வாணன் (வயது27) என்பவரையும், உடன் வந்த கஜபதி (40) என்பவரையும் கைது செய்தனர்.

அதே போல திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த பதிவு எண் இல்லாத ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த ஈக்காட்டை சேர்ந்த கிஷோர்குமார் (26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்