வீட்டு வாசலில் விளக்கு ஏற்றும்போது சேலையில் தீப்பிடித்து பெண் சாவு

வீட்டு வாசலில் விளக்கு ஏற்றும்போது சேலையில் தீப்பிடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-10-31 21:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பெரியக்குப்பம் கே.கே.நகரை சேர்ந்தவர் வீரராகவன். இவரது மனைவி சசிகலா (வயது 42). இந்த நிலையில் கடந்த 8–ந் தேதியன்று சசிகலா தன்னுடைய வீட்டு வாசலில் விளக்கேற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா சிகிச்சை பலனில்லாமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்