கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி வேதாரண்யத்தில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2018-11-01 04:00 IST
வேதாரண்யம்,

வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியத்தை கிராம உதவியாளருக்கும் வழங்க வேண்டும்.

காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் போன்று கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும். போனஸ் ரூ.3 ஆயிரத்து 500 வருவாய்த்துறை உதவியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் வட்டத்தலைவர் சோழன், செயலாளர் ஆனந்த், பொருளாளர் சரவணன், துணைத்தலைவர் தேன்மொழி மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்