லெனோவா திங்க்பேட் இ 480

மின்னணு பொருட்களைத் தயாரிக்கும் சீனாவைச் சேர்ந்த லெனோவா நிறுவனம் லேப்டாப் தயாரிப்பிலும் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம்தான் திங்க்பேட் இ-480 மாடல் லேப்டாப்.

Update: 2018-10-31 07:17 GMT
முந்தைய மாடல்களைக் காட்டிலும் சிறப்பான செயல்திறன், மிகவும் உறுதியான வடிவமைப்பு என கொடுக்கும் பணத்திற்கு தரமாக உள்ளது என்ற நற்சான்றை பெற்றதாக இது உள்ளது. 14 அங்குலம் கொண்டதாக இந்த லேப்டாப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 57,496 (ஜி.எஸ்.டி.தனி). இது மிகவும் மெல்லியதாகவும், எடை குறைவானதாகவும் உள்ளது.

இது கருப்பு நிறத்தில் மிகச் சிறப்பான வடிவமைப்போடு வந்துள்ளது. இதன் கீ-போர்டில் ஒளிரும் (பேக் லைட்) வசதி இருப்பதால் குறைந்த வெளிச்சத்திலும் செயல்படுத்த முடியும்.

இதில் விரல் ரேகை சென்சார் திங்க் பேட் லோகோவின் மேல் அழகாக இடம்பெற்றுள்ளது. தற்போது நாம் பெரும்பாலும் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துகிறோம். அதில் உள்ள கீ-போர்டுக்கு நாம் அதிகம் பழகியுள்ளோம். அதேபோல இதில் உள்ள கீ-போர்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த விஷயத்தில் லெனோவா தனது வாடிக்கையாளர்களின் மன நிலையை நன்கு உணர்ந்து தொழில்நுட்பத்தை செயல்படுத்தியுள்ளதைப் பார்க்க முடிகிறது. இதில் உள்ள டிராக் பேட் மிகச் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

பொதுவாக கீ-போர்ட் மற்றும் டிராக் பேட் ஆகியவை சிறப்பாக இருந்தால் உங்களது டைப்பிங் திறன் மேம்படும். பிழைகளும் குறைவாக இருக்கும். அந்த வகையில் திங்க்பேட் கீ-போர்ட் மற்றும் டிராக் பேட் ஆகியவை மிக வசதியான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் 7-வது தலைமுறை கோர் ஐ3 சி.பி.யு. உள்ளது. 4 ஜி.பி. ரேம், 1 டெரா பைட் ஹெச்.டி.டி. ஸ்பின்னிங் 5400 ஆர்.பி.எம். மற்றும் 8-வது தலைமுறை கோர் ஐ7 மற்றும் 8 ஜி.பி. ரேம் 1 டெரா பைட் ஹெச்.டி.டி. ஸ்பின்னிங் 5400 ஆர்.பி.எம். ஆகியவற்றுடன் வந்துள்ளது. இதன் விலை ரூ.53,500 ஆகும்.

இதன் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்ட நிலையில் 13 மணி நேரம் தொடர்ந்து செயல்படக் கூடியது.

மேலும் செய்திகள்