சோனி சைபர் ஷாட் கேமராக்கள்
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சோனி நிறுவனம் சைபர் ஷாட் பிரிவில் இரண்டு புதிய கேமராக்களை அறிமுகம் செய்துள்ளது.;
சைபர் ஷாட் டி.எஸ்.சி. ஹெச்எக்ஸ் 99 மற்றும் சைபர் ஷாட் டி.எஸ்.சி. ஹெச்.எக்ஸ். 95 என இரண்டு மாடல்கள் வந்துள்ளன. ஜூம் கேமராக்களைக் கொண்டவை. புளூடூத் இணைப்பில் செயல்படுத்தக் கூடியவை. ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ள இந்த கேமராக்கள் இந்தியாவில் அடுத்த மாதம் விற்பனைக்கு வர உள்ளது. சுற்றுப் பயணத்தின் போது கையில் எடுத்துச் செல்லக்கூடிய சிறிய அளவிலான ஜூம் கேமராவாக இதை சோனி உருவாக்கியுள்ளது. 4 கே காட்சிகளை பதிவு செய்யும் வசதி கொண்டது. இந்த கேமராக்கள் ஜூம் அளவு 24 மி.மீ. ஆகும். வைட் அளவு 720 மி.மீ. ஆகும். இது ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் செயல்படக் கூடியது. அதேசமயம் ஐபோன் 4 எஸ் மற்றும் அதற்கு முந்தைய 3-ம் தலைமுறை ஐபேட் மூலம் இதை செயல்படுத்தலாம். விரைவாக நகரும் பொருள்களையும் இதில் படம் பிடிக்கும் வசதி உள்ளது. இதன் விலை ரூ. 41,500 மற்றும் ரூ. 43,000 இருக்கும்.