லால்குடி அருகே பங்குனி வாய்க்கால் தடுப்பணை உடையும் அபாயம்
லால்குடி அருகே பங்குனி வாய்க்கால் தடுப்பணை உடையும் அபாய நிலையில் உள்ளது.
லால்குடி,
திருச்சி மாவட்டம், முக்கொம்பில் இருந்து வாத்தலை, மண்ணச்சநல்லூர், சமயபுரம், வாளாடி, மாந்துறை, திருமங்கலம் வழியாக பங்குனி வாய்க்கால் செல்கிறது. இதில் லால்குடி அருகே திருமங்கலத்தில் உள்ள பங்குனி வாய்க்காலின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கிவைத்து பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் முசிறி வடகரை வாய்க்காலில் இருந்தும், துறையூரை அடுத்த கொல்லிமலையில் இருந்தும் பருவமழை காலங்களில் உப்பாறு வழியாக தண்ணீர் திருமங்கலம் தடுப்பணைக்கு வருகிறது. பின்னர் இங்கு இருந்து பங்குனியாறு, கூழையாறு வழியாக பிரிந்து சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு மதகுகள் வழியாக பாசனத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
திருமங்கலம் தடுப்பணை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாக கிராமமக்கள் கூறுகின்றனர். தற்போது இந்த தடுப்பணையில் கொஞ்சம் கொஞ்சமாக அடியில் நீர்க்கசிவு ஏற்பட்டு, மண் அரிப்பால் பாலத்தின் மேல் திட்டுகள் சரிந்து உள்ளன.
தற்போது, பருவமழை தொடங்க உள்ளதால் முசிறி, துறையூர் கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பங்குனியாறு, கூழையாறுகளில் அதிகளவில் தண்ணீர் வரும். இதனால் திட்டுகள் மெல்ல நகர்ந்து தடுப்பணை உடையும் அபாயத்தில் உள்ளது.
தடுப்பணை உடைந்தால் திருமங்கலம், பூவாளூர், காட்டூர், திண்ணியம், செம்பரை, திண்ணக்குளம், முல்லாள், நத்தமாங்குடி, நத்தம் உள்ளிட்ட ஊர்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்கள் நீரில் மூழ்கும் சூழ்நிலை உள்ளது. எனவே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமங்கலம் தடுப்பணையை சீரமைத்து சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் அடித்துச்செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.