தூத்துக்குடியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: இலவச பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
தூத்துக்குடி கே.வி.கே.சாமி நகரை சேர்ந்த பொதுமக்கள் இலவச பட்டா கேட்டு, மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி கே.வி.கே.சாமி நகரை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘நாங்கள் கே.வி.கே.சாமி நகரில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். நாங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வைத்து உள்ளோம். எங்கள் பகுதியில் குடிநீர், சாலை, மின்இணைப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. எங்களுக்கு குடியிருக்க வேறு இடம் கிடையாது. எனவே நாங்கள் குடியிருக்கும் வீட்டுமனைக்கு இலவச பட்டா வழங்க வேண்டும்‘ என கூறி இருந்தனர்.
பா.ம.க. மத்திய மாவட்ட செயலாளர் ஜெபக்குமார் கொடுத்த மனுவில், ‘புதுக்கோட்டை பகுதியில் அரசு சார்பில் புதிதாக ஒரு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடை பள்ளிக்கூடம், கிறிஸ்தவ ஆலயம் அருகே உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.
ஓட்டப்பிடாரம் தாலுகா கீழமுடிமன் கிராமத்தை சேர்ந்த கயல்விழி என்பவர் கொடுத்த மனுவில், ‘கடந்த மே மாதம் 22-ந்தேதி தூத்துக்குடியில் நடந்த கலவரத்தின்போது, எனது மகன் ஜஸ்டின் செல்வ மித்திசை தலையில் போலீசார் தாக்கினர். இதனால் 2 நாட்களுக்கு பின்னர் அவருக்கு சுயநினைவு வந்தது. பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், கடந்த 15.10.2018 அன்று திடீரென உயிரிழந்தார். அவர் எந்தவொரு இயக்கத்திலோ, அமைப்பிலோ இல்லை. எனது மகன் வேலை பார்த்த கம்பெனிக்கு அன்று திடீர் விடுமுறை அளித்ததால், அவர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது போலீசார் தாக்கி உள்ளனர். எனவே ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கியது போல் போலீசாரின் தாக்குதல் காரணமாக இறந்த எனது மகனுக்கும் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் எனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.
தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் காற்றாலை நிர்வாகத்தின் மூலம் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள், கால்வாய்கள், விவசாய நிலங்கள், தனியார் நிலங்களில் அனுமதியின்றி அத்துமீறி நடப்பட்டு உள்ள மற்றும் அகற்றப்பட்டு உள்ள மின்கம்பங்கள் மற்றும் அரசு அனுமதி அளித்துள்ள உத்தரவுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே அதற்கு ஏதுவாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.