தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்பட 5 இடங்களில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 627 பேர் கைது
தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்பட 5 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 627 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை மற்றும் உணவு மானிய தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் கடந்த 25-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். நேற்று முதல் தொடர் சாலை மறியல் போராட்டத்தை தொடங்கினர்.
அதன்படி, தூத்துக்குடி அரசு ஊழியர் சங்க அலுவலகம் முன்பு பாளையங்கோட்டை ரோட்டில் சத்துணவு ஊழியர்கள் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பாக்கியசீலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பொன்சேகர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மறியலை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, சுப்பிரமணியன், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாநில செயலாளர் முருகன், அண்ணாமலை பரமசிவம், மாநில துணைத்தலைவர் தமிழரசன், மாவட்ட பொருளாளர் ஆண்டிச்சாமி ஆகியோர் பேசினர். தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் பாளையங்கோட்டை ரோட்டில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 159 பேரை கைது செய்தனர்.
கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சங்க வட்டார தலைவர் பாலையா, செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 98 பேரை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பிருந்து சத்துணவு ஊழியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்று, திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட துணை தலைவர் ஜேசுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்ட 144 பெண்கள் உள்பட 148 பேரை திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட துணை தலைவர் ஆனந்தசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 151 பெண்கள் உள்பட 158 பேரை விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட துணை தலைவர் துரைராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 52 பெண்கள் உள்பட 64 பேரை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் மொத்தம் 627 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.