நெல்லையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: குளத்தில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க கோரி கலெக்டரிடம் மனு
கொசுக்கள் உற்பத்தியாகி நோயை பரப்புவதால் குளத்தில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க கோரி நெல்லையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கி நடவடிக்கை எடுப்பதற்காக அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் காதர் பாஷா தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் ஷில்பாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘நெல்லை மேலப்பாளையத்தில் கன்னிமார்குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆமீம்புரம் உள்ளிட்ட பகுதி கழிவுநீர் ஓடைகள் அனைத்தும் இணைக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த குளத்தில் வந்து தேங்குகிறது.
இதனால் கொசு உற்பத்தியாகி டெங்கு மற்றும் விஷக்காய்ச்சலை பரப்பி வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குளத்தில் கழிவுநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் அதை ஓடை அமைத்து வெளியே கொண்டு செல்ல வேண்டும். குளத்தில் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும். மேலும் மழை காலத்தில் இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பும்போது அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே அதை தடுக்கும் வகையில் குளத்தை தூர்வாரி, சீமை கருவேல மரங்களை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “கடையநல்லூர் நகராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் 13 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகிறோம்.
ஆனால் இங்கு குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். குடிநீர் இணைப்பு பெறுவதற்காக வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்தி தருமாறு பதிவு செய்துள்ளோம். எனவே அதிகாரிகள் வரன்முறைப்படுத்தி தருவதுடன், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பும் உடனடியாக வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.
இந்து மக்கள் கட்சியினர் தென்மண்டல பொதுச்செயலாளர் கார்த்தீசன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் நுழைவு வாசல் முன்பு திடீரென்று முட்டி போட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “நெல்லை தாழையூத்து நான்கு வழிச்சாலை ஓரத்தில் நடப்பட்டிருந்த இந்து மக்கள் கட்சி கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றி விட்டனர். மேலும் மாவட்ட தொழிற்சங்க தலைவர் இசக்கிதுரை மீதும் பொய்யான வழக்குப்பதிவு செய்துள்ளனர். அங்கு அந்த கொடிக்கம்பத்தை மீண்டும் நடுவதற்கு அனுமதிக்க வேண்டும், பொய் வழக்கு போட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
கடையம் யூனியன் கருத்தப்பிள்ளையூர் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “கடந்த 5 ஆண்டுகளாக கருத்தப்பிள்ளையூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த கொள்முதல் நிலையத்தை சிவசைலம் பகுதிக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து எங்கள் ஊரிலே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
திருவேங்கடம் தாலுகா மலையடிப்பட்டியை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள், ஊர் நாட்டாமை கண்ணன் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரின் அருகே காரிசாத்தான் மலை உள்ளது. மலையின் தெற்கு பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதை நம்பி நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மலையின் தெற்கு பகுதியில் நிலத்தை சீரமைப்பு செய்வதாக கூறி மணல் அள்ளி செல்கின்றனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்மூலம் அந்த பகுதியில் உள்ள குடிநீர் கிணறு பாதிக்கப்படும். எனவே மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.
செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் நடராஜபுரத்தில் தேவாலயம் கட்ட தடை விதிக்க கோரி, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நாட்டாமை கணேசன் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தனர். இதேபோல் பல்வேறு தரப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.