நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் பெண்கள் உள்பட 215 பேர் கைது
காலமுறை ஊதியம் வழங்க கோரி நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 215 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அமைப்பாளர்களுக்கு ஒட்டுமொத்த தொகை ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 நாட்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
நேற்று அவர்கள் நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் மாவட்ட தலைவர் பிச்சுமணி தலைமையில் அங்கு கூடினர். மாவட்ட செயலாளர் கோவில் பிச்சை கோரிக்கைளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் கங்காதரன், பொருளாளர் வீரராஜ் ஆகியோர் பேசினார். சமூக நலத்துறை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் துரைசிங் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து சத்துணவு ஊழியர்கள் பஸ் நிலையம் எதிரில் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டது. இதைக்கண்ட போலீசார் பஸ் உள்ளிட்ட வாகனங்களை திருப்பி விட்டனர்.
பின்னர், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, போலீஸ் பஸ், வேன்களில் அழைத்துச் சென்றனர். அவர்களை ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். 184 பெண்கள் உள்பட மொத்தம் 215 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் (செவ்வாய்க்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.