மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீல் பதவி ஏற்றார்
மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீல் நேற்று பதவி ஏற்றார்.
மும்பை,
மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த விஜய தஹில் ரமணி சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக கடந்த ஆகஸ்டு மாதம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீல் இருந்து வந்தார்.
இந்தநிலையில், அவர் மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவி ஏற்பு விழா நேற்று மும்பை மலபார்ஹில்லில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்தது.
மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீல் நியமிக்கப்பட்ட உத்தரவை, தலைமை செயலாளர் டி.கே.ஜெயின் வாசித்தார். இதையடுத்து, தலைமை நீதிபதியாக நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீலுக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதை தொடர்ந்து, தலைமை நீதிபதிக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தலைமை நீதிபதியும், கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து கவுரவித்தார்.
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், தலைமை செயலாளர் டி.கே.ஜெயின் உள்ளிட்டோரும் தலைமை நீதிபதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் கவர்னரின் மனைவி வினோதா, மாநில மந்திரிகள் வினோத் தாவ்டே, தீபக் கேசஸ்கர், மேயர் விஸ்வநாத் மகாதேஸ்வர், மும்பை ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மும்பை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்று உள்ள நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீல் 1957-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி பிறந்தார்.
லாத்தூரில் சிவில் மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் பணியாற்றினார். 2001-ம் ஆண்டு அக்டோபர் 12-ந் தேதி மும்பை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக இருந்தார். 2004-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி அவர் நிரந்தர நீதிபதி ஆனார்.