உபேர், ஓலா டிரைவர்கள் போராட்டத்தால் அந்தேரியில் கடும் போக்குவரத்து பாதிப்பு

உபேர், ஓலா டிரைவர்கள் போராட்டத்தால் அந்தேரியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.;

Update: 2018-10-29 22:30 GMT
மும்பை,

மும்பையில் உபேர், ஓலா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் வாடகை கார்களை இயக்கி வருகின்றன. இதில் தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கார் வாடகையை அதிகரிக்க வேண்டும், கார் டிரைவர்கள் பயணிகளால் தாக்கப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு கார் ஓட்டும் டிரைவர்கள் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இதை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் பாதிப்படைந்தனர்.

இந்த நிலையில், நேற்று உபேர், ஓலா நிறுவன அலுவலகம் முன் திரண்டு வாடகை கார் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மற்ற வாகனங்களை செல்லவிடாமல் தனது வாடகை கார்களை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்திருந்தனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்