காஞ்சீபுரம், திருவள்ளூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 630 பேர் கைது
காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக சத்துணவு ஊழியர்கள் 480 பெண்கள் உள்பட 630 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
ஓய்வூதிய பணப்பயன் அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானிய செலவை வழங்க வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று சத்துணவு ஊழியர்கள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்்த்தி, மாவட்ட செயலாளர் பக்கிரி உள்பட திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதையடுத்து காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 400 பெண்கள் உள்பட 500 பேரை கைது செய்தனர். அனைவரையும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் திருவள்ளூரிலும் சத்துணவு ஊழியர்கள் தங்களின் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம், தாசில்தார் அலுவலக வளாகத்தில் சமைத்து சாப்பிட்டும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி நேற்று திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே சத்துணவு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட துணைத்தலைவர்கள் நாகராஜன், தேவஅதிசயம், குணசுந்தரி, மாவட்ட இணை செயலாளர்கள் தேவசம்பத், இளையராஜா உள்பட திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் திடீரென திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டதாக 80 பெண்கள் உள்பட 130 சத்துணவு ஊழியர்களை கைது செய்து, திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.