உளவுத்துறை போலீசில் 1054 வேலை வாய்ப்புகள் 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
உளவுத்துறை போலீஸ் பிரிவில் 1054 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.;
மத்திய உளவுத்துறை போலீஸ் படைகளில் ஒன்று இன்டலிஜென்ஸ் பீரோ. நுண்ணறிவுத் துறை போலீஸ் பிரிவான இதில் தற்போது செக்யூரிட்டி அசிஸ்டன்ட் (குரூப்-சி) பணிகளுக்கு 1054 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அனைத்து மாநில கிளைகளிலும் பணியிடங்கள் உள்ளன. தமிழகத்திற்கு 40 இடங்கள் உள்ளன. அதிகபட்சமாக டெல்லிக்கு 228 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 620 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 187 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 160 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 87 இடங்களும் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். இதே துறையில் பணிபுரிபவர்கள் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் உள்ள மண்டல மொழியை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 10-11-2018-ந் தேதியாகும். விண்ணப்பதாரர் ரூ.50 தேர்வுக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.mha.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.