ஸ்மார்ட் ரேஷன்கார்டில் நாளை மறுநாளுக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
ஸ்மார்ட் ரேஷன்கார்டில் நாளை மறுநாளுக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- பொதுவினியோக திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய ஆதார் எண்களையும் இணைக்க வேண்டும் என அரசால் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களின் ஸ்மார்்ட் ரேஷன்கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடைய ஆதார் எண்களையும் நாளைமறுநாளுக்குள் (புதன் கிழமை) பதிவு செய்ய வேண்டும்.
மேலும் ஸ்மார்ட் கார்டில் உள்ள குழந்தைகளுக்கு (1 முதல் 5 வயது வரை) பிறப்பு சான்றிதழ் மூலம் ஏற்கனவே பதிவு செய்திருப்பின், அவர்களுக்கும் தற்போது ஆதார் எண் பதிவு செய்யப்பட வேண்டும்.
தற்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் புதிதாக ஆதார் எடுக்கும் நபர்களுக்கு இலவசமாக புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.