தொழில் அதிபர் வீட்டில் ரூ.14 லட்சம் நகை, பணம் திருட்டு வேலைக்கார பெண் கைது

தொழில் அதிபர் வீட்டில் ரூ.14 லட்சம் வைர நகை, பணத்தை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-10-28 23:00 GMT
மும்பை, 

தொழில் அதிபர் வீட்டில் ரூ.14 லட்சம் வைர நகை, பணத்தை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நகை, பணம் திருட்டு

மும்பை வில்லேபார்லேயை சேர்ந்த தொழில் அதிபர் மனோஜ் பாரிக். சம்பவத்தன்று இவரது மனைவி திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்வதற்காக பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுக்க சென்றார். அப்போது, அதில் இருந்த வைர நகைகள் மற்றும் பணம் காணாமல் போயிருந்தது.

அவற்றின் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணவரிடம் தெரிவித்தார்.

பின்னர் இருவரும் ஜூகு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

வேலைக்கார பெண் கைது

இதில், மனோஜ் பாரிக்கின் வீட்டில் வேலை பார்த்து வரும் சோனாலி பேராவே (வயது19) என்ற பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தான் பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியின் போது, தனது சொந்த ஊரான ராய்காட்டிற்கு சென்ற நேரத்தில் அவற்றை திருடி கொண்டு சென்றதாக கூறினார். இதையடுத்து போலீசார் சோனாலி பேராவேயை கைது செய்தனர்.

அவர் திருடிய நகை, பணத்தை கைப்பற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்