பள்ளி கல்வித்துறையில் நல்லிணக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் கலெக்டர் ரோகிணி வேண்டுகோள்
தாழ்த்தப்பட்டவர்களை பணி செய்யவிடாமல் ஒதுக்கக்கூடாது என்றும், பள்ளி கல்வித்துறையில் நல்லிணக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் கலெக்டர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சாதி, மத பேதமற்று, மதநல்லிணக்கத்தையும், சாதிய ஒற்றுமையையும் எப்போதும் பேணிவரும் மாவட்டம் என்பதிலே நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள முடியும். இருப்பினும் சமீபகாலத்தில் பள்ளி கல்வித்துறையை சேர்ந்த அமைப்புகளில் நிகழ்ந்திருக்கும் விரும்பதகாத சம்பவம் வெளிவருகிறது.
ஒரு பள்ளியின் சத்துணவுக் கூடத்தின் சமையலர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், அவர் சமைத்த உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் எனவும், அவரை இட மாற்றம் செய்யவேண்டும் எனவும் தெரிவித்தனர். இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சினை முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
இத்தகைய நிகழ்வுகள் இனி சேலம் மாவட்டத்தில், குறிப்பாக பள்ளி கல்வித்துறையை சேர்ந்த அமைப்புகளில், எங்கும் நடைபெறாமல் உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். இதில் கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள், சத்துணவு திட்ட பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் தொடர்புடைய அனைவருக்கும் பொறுப்பும், கடமையும் உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களை யாரும் பணி செய்ய விடாமல் ஒதுக்கி வைக்கக்கூடாது.
பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அநீதிகளை தடுப்பதற்காக பல்வேறு குற்றவியல் சட்டப்பிரிவுகள் உள்ளன. இது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இச்சட்டங்கள் காவல்துறை வழியாக உடனடியாகவும், தீவிரமாகவும் நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உறுதியாக இருக்கிறது. கல்வித்துறையினர் சமத்துவம் மற்றும் கண்ணியம் தவறாது செயல்படுவோம் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பள்ளி கல்வித்துறையை சேர்ந்த அனைவரும் இன்னும் கவனமுடனும், சாதி, மத, இன நல்லிணக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். நல்லிணக்கத்தை மாணவர், பொதுமக்கள் என அனைவரும் இன்னும் செழுமையாக இயன்ற அனைத்து பணிகளையும் ஆற்றும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.