காலம் தாழ்த்தாமல் தினகரன் அணியினர் மேல் முறையீடு செய்ய வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி

தினகரன் அணியினர் காலம் தாழ்த்தாமல் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தொல்.திருமாவளவன் பேட்டி அளித்தார்.

Update: 2018-10-28 23:00 GMT

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இலங்கையில் ராஜபக்சேவை பிரதமராக தேர்ந்தெடுத்திருப்பது இலங்கை அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. டிசம்பர் 10–ந் தேதி திருச்சியில் தேசம் காப்போம் என்ற மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ராகுல்காந்தி, சீத்தாராம் எச்சூரி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். சேலத்தில் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இதனை கண்டித்து வருகிற 5–ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டி.டி.வி. தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களுக்கான தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்ய விடுதலைச்சிறுத்தை கட்சி தினகரன் அணியினருக்கு கோரிக்கை வைக்கிறது. காலம் தாழ்த்தாமல் தினகரன் அணியினர் விரைவாக மேல் முறையீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்