அவினாசியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.;
அவினாசி
அவினாசி அரசு கலைக்கல்லூரியில் கூடுதலான வகுப்பறைகள் அமைக்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கான பொது விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் சட்ட விரோதமாக நடைபெறும் மதுபான விற்பனை, சேவல் சண்டை ஆகியவற்றை போலீசார் தடுக் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டையாம்பாளையத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும். அவினாசி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் அவினாசி புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் அருண் தலைமை தாங்கினார். வடிவேல், ரங்கநாதன், பன்னீர்செல்வம், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.