தூத்துக்குடியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தூத்துக்குடியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலை தொடங்கி வைத்தார்.

Update: 2018-10-28 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலை தொடங்கி வைத்தார்.

சைக்கிள் பேரணி

தூத்துக்குடி நெய்வேலி தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம்(என்.டி.பி.எல்) மற்றும் பியர்ல்சிட்டி ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை நடத்தியது. தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணி பாளையங்கோட்டை ரோடு மற்றும் நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்றது. பேரணியில் சென்றவர்கள் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியபடி சைக்கிளில் சென்றனர்.

நிகழ்ச்சியில் என்.டி.பி.எல். அனல் மின்நிலைய முதன்மை செயல் அதிகாரி சாஜிஜான், தலைமை நிதி அதிகாரி ஜெயசிங் டேனியல், பொது மேலாளர் ராஜமீனாட்சி, பியர்ல் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் பொதிகை கண்ணன், செயலாளர் செந்தில் ஆறுமுகம், உதவி ஆளுநர் கண்ணன், திட்ட தலைவர் எபுதாமஸ், அசோக் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்