மணலி மாத்தூரில் சட்டவிரோத மது விற்பனையால் குடிமகன்கள் அட்டூழியம்
சென்னை மணலி மாத்தூரில் சட்டவிரோத மது விற்பனையால் குடிமகன்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தங்கள் குடிகார கணவன்களை, மதுக்கடைக்கே வந்து மனைவிகள் கெஞ்சி கூட்டி செல்கின்றனர்.
சென்னை,
‘படிக்காதவன்’ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் சாராயக்கடையில் ரஜினிகாந்த் சோகம் தாளாமல் மது குடித்து கொண்டிருப்பார். அப்போது நடிகை அம்பிகா அங்கே வந்து ‘எனக்கும் ஒரு கிளாஸ் ஊத்து...’, என்று மல்லுக்கு நின்று அந்த கடையில் இருந்து ரஜினிகாந்தை கூட்டிக்கொண்டு செல்வார். இந்த காட்சி நடைமுறை வாழ்க்கையிலும் பல இடங்களில் சாத்தியமாகி வருகின்றன.
முன்பு சோகத்தால் மதுகடைகளை தேடி ஓடியவர்கள் உண்டு. இன்று மதுவுக்கே அடிமையாகிவிட்ட குடிமகன்கள் வீட்டிலே இருப்பு கொள்ளாது, ‘டாஸ்மாக்’ கடைகளிலேயே தஞ்சம் புகுந்து விடுகின்றனர். பெற்ற பிள்ளைகளுக்கு பால் பாக்கெட் வாங்க கூட கடைக்கு செல்லாத, குடும்ப தலைவன் காலையிலேயே ‘டாஸ்மாக்’ கடையை தேடி ஓடும் அவலம் இன்றைக்கும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரம் பகல் 12 மணி என அறிவித்திருக்கிறது. ஆனால் இந்த அறிவிப்பு ‘ஊருக்கு மட்டுமே உபதேசம்’, எனும் ரீதியிலேயே கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களின் போராட்ட எதிரொலியாக புதிய மதுக்கடை திறப்பு என்பது தற்போது கானல் நீராகிவிட்டது. இதனால் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
பொதுவாகவே இரவு நேரத்தில் போதை வெறியில், ‘டாஸ்மாக்’ கடை வாசலை தட்டி கூடுதல் காசு கொடுத்து மதுபாட்டில்கள் வாங்கி செல்வது அரசல்புரசலாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் சமீபகாலமாக ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு முன்பு அதிகாலை வேளையிலேயே போதை ஆசாமிகள் கூடிவருகிறார்கள். சில இடங்களில் கும்பல் கும்பலாகவே காணப்படுகிறார்கள். இவர்களின் பணத்தை கொடுத்தால் போதும் விரும்பிய கம்பெனிகளின் மது பானத்தை வாங்கி சத்தமில்லாமல் செல்லலாம்.
அந்தவகையில் சென்னை மணலி மாத்தூர் அருகே முந்திரிதோப்பு 2-வது மெயின்ரோட்டில் உள்ள பூங்காவுக்கு எதிரில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. குடியிருப்பு பகுதியில் இருக்கும் இந்த ‘டாஸ்மாக்’ கடையில் சட்டவிரோத மது விற்பனை வெளிப்படையாகவே நடந்து கொண்டிருக்கிறது. ‘24 மணி நேர சேவை’யாற்றிக்கொண்டு இருக்கும் இந்த டாஸ்மாக் கடையின் முன்பு எப்போதுமே ஒரு கூட்டம் காத்திருப்பதை பார்க்கலாம்.
இதனால் காலை எழுந்ததுமே கடை இருக்கும் திசை நோக்கி ஓட்டம் பிடிக்கும் குடிமகன்களால், அவர்களை நம்பியிருக்கும் குடும்பம் வீதிக்கே வந்துவிடுகிறது. கூடுதல் விலைக்கு மது வாங்கி கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக்கும் குடிமகன்கள், மனைவி மற்றும் பிள்ளைகளின் பசியை போக்க மறந்துவிடுகிறார்கள். இதனால் தங்கள் குடிகார கணவன்களை தேடி, அந்த ‘டாஸ்மாக்’ கடைக்கே மனைவிமார்கள் கண்ணீருடன் வந்து கெஞ்சி கூட்டி போகின்றனர். சில பெண்கள் ‘உங்களால் தான் இப்படி நடக்கிறது...’, என கடை ஊழியர்களுடன் தகராறு செய்துவிட்டும் செல்கின்றனர்.
பல்லாவரத்தில் ரெயில் நிலைய சாலையில் 2 மதுக்கடைகள், ஆடுதொட்டி மற்றும் ஒரு தியேட்டர் அருகே தலா ஒன்று என மொத்தம் 4 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த மதுக்கடைகள் சமீபத்தில் மூடப்பட்டன. இதையடுத்து ரெயில் நிலைய சாலையில் உள்ள சுரங்கப்பாதை பகுதியில் கடை ஒன்றில் சட்டவிரோதமாக மதுபானங்கள் ரகசியமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளிவரும் சமயங்களில், வெறும் கண்துடைப்புக்காக 3 நாட்கள் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு மது விற்பனையை தடுத்து நிறுத்துகிறார்கள். அதன்பிறகு மீண்டும் இயல்புநிலை திரும்பி விடுகிறது. போலீஸ் நிலையம் அருகாமையில் இருந்தும், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலைமை நகரின் பெரும்பாலான இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. மதுக்கடைகளை இரவு 10 மணிக்கு மூடவேண்டும் என்பது விதி. ஆனால் இந்த விதிமுறையை மீறி சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் மதுக்கடைகள் திறந்து வைக்கப்படுகின்றன. சில இடங்களில் காலை முதலே சத்தமில்லாமல் மது விற்பனை நடக்கிறது.
எனவே பல்வேறு பிரச்சினைகளுக்கு தூண்டுகோலாக இருக்கும் அதிக நேரம் செயல்படும், சட்டவிரோத மதுக்கடைகள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.