தூத்துக்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலி
தூத்துக்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்ப்பிணி
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். அவருடைய மனைவி சாந்தினி (வயது 26). இவர்களுக்கு 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது சாந்தினி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் சாந்தினிக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக முத்தையாபுரம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார்.
பரிதாப சாவு
ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சாந்தினி சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் சாந்தினி பரிதாபமாக இறந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரியிடம் கேட்ட போது, முள்ளக்காட்டில் கர்ப்பிணி சாந்தினி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளார்.
அவர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று உள்ளார். அவருக்கு என்ன விதமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தது? என்பது குறித்து விரிவாக விசாரித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.