பெரும்பாலை அருகே மர்ம காய்ச்சலுக்கு லாரி டிரைவர் பலி

பெரும்பாலை அருகே மர்ம காய்ச்சலுக்கு லாரி டிரைவர் பலியானார்.

Update: 2018-10-28 21:45 GMT

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள பெத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்ராஜ். இவருடைய மகன் ராஜா (வயது 28). லாரி டிரைவர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராஜா மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அவர் சிகிச்சை பெற்றார்.

ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ராஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை.

மேலும் காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்தது. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ராஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மர்ம காய்ச்சலுக்கு டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்