திருச்சி-சார்ஜா விமானத்தில் திடீர் கோளாறு 12 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதி
திருச்சி-சார்ஜா விமானத்தில் திடீர் கோளாறு காரணமாக பயணிகள் அவதியடைந்தனர். 12 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.
செம்பட்டு,
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் துபாய், சிங்கப்பூர், மலேசியாவுக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், இரவு-பகல் என எந்த நேரமும் விமான போக்குவரத்து நடைபெறும். திருச்சியில் இருந்து தினந்தோறும் சார்ஜாவிற்கு, ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் அதிகாலை 2.30 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் அதிகாலை 3.20 மணிக்கு சார்ஜா நோக்கி புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி, விமானம் வழக்கம்போல் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. பின்னர் மீண்டும் 3.20 மணிக்கு புறப்பட தயாரான நிலையில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்பு விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்ய இருந்த 103 பயணிகளும், விமான நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் தொழில்நுட்ப பொறியாளர்கள், விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். சரியான நேரத்தில் விமானம் புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர். இந்தநிலையில் விமானத்தில்
ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மாலை 3 மணிக்கு விமானம் புறப்படும் என்று விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 12 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு நேற்று மாலை 3 மணிக்கு திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு 103 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.