கொசுப்புழு உற்பத்தி ஆதாரம் கண்டறியப்பட்டால் அபராதம் கலெக்டர் அன்பழகன் எச்சரிக்கை
கொசுப்புழு உற்பத்தி ஆதாரம் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர்,
கரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்புபணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு காமராஜர் நகர் பகுதி, அண்ணாநகர் பகுதி மற்றும் கரூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குள் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகளையும், வாய்க்கால்கள், நீர்த்தேங்க வாய்ப்புள்ள அனைத்து இடங்களையும் பார்வையிட்டு உரிய ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார்.
அப்போது ஒரு சில வீடுகளின் முன் வைக்கப்பட்டிருந்த தொட்டியில் உள்ள நீரில் கொசுப்புழுக்கள் இருப்பதை பார்த்த கலெக்டர், அவை தண்ணீரில் வளருவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து வீட்டின் உரிமையாளர்களுக்கும், அந்த குடியிருப்புவாசிகளுக்கும் எடுத்துரைத்தார். அப்போது பொதுமக்களுக்கு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதே போல் வெங்கமேடு ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள தனியார் ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்சாலை உள்ளிட்டவற்றிலும் கொசுப்புழு உற்பத்தி யாகும் சூழல் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:- கரூரில் இனிவரும் காலங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும்போது கொசுப்புழு உற்பத்தியாகும் வகையிலான சூழல் வீடுகளிலோ, கடைகளிலோ, தொழிற்சாலைகளிலோ, பொதுநிறுவனங்களிலோ இருப்பது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். தனியார் நிலங்களில் அடர்ந்து வளர்ந்திருக்கும் முட்செடிகளையும், புதர்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உரிமையாளர்கள் முன்வர வேண்டும். கொசுப்புழுக்கள் உற்பத்தியாக இதுபோன்ற இடங்களும் காரணியாக அமைகின்றன என்பதை கருத்தில் கொண்டு உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்பட்டு, அந்தசெடிகள் அகற்றப்படும். அதற்குரிய செலவினத்தொகை இடத்தின் உரிமையாளரிடமிருந்து வசூல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கரூர் நகராட்சி ஆணையர் செந்தில்முருகன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நிர்மல்சன், நகர்நல அதிகாரி ஆனந்தகுமார், வட்டாட்சியர் ஈஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.