கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகளை கொட்டக்கூடாது; பொதுமக்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்
புதுவை நகர பகுதியில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த கலெக்டர், கழிவுநீர் வாய்க்கால் களில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.
புதுச்சேரி,
கவர்னர் கிரண்பெடி உத்தரவின் பேரில் புதுவை மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி சனிக்கிழமை தோறும் நகர பகுதிகளில் அதிகாரிகளுடன் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது புதுவையில் டெங்கு, பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. 50-க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணி, நகர் முழுவதும் கொசுமருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி நேற்று நகர பகுதிகளில் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை பார்வையிட்டார்.
புதுவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஆய்வை தொடங்கிய கலெக்டர், கிழக்கு கடற்கரை சாலை, கிருஷ்ணாநகர் விரிவாக்கம், பாரதிநகர், கருவடிக்குப்பம் வழியாக சாமிபிள்ளை தோட்டம் பகுதிக்கு சென்றார். அங்குள்ள கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. அதனை உடனடியாக அகற்றும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம், குப்பைகளை கழிவுநீர் வாய்க்காலில் கொட்டக்கூடாது. துப்புரவு ஊழியர்களிடம் தான் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
பின்னர் தேவகிநகர், ரெயின்போ நகர், உப்பனாறு வாய்க்கால் பகுதிக்கு சென்றார். அங்கு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நிதி தட்டுப்பாடு காரணமாக தற்போது பணி நடைபெற வில்லை. கட்டுமான பொருட்கள் வாய்க்காலில் ஆங்காங்கே கிடந்தது. இதனை பார்த்த கலெக்டர், அங்கு வேலை செய்யும் ஒப்பந்ததாரரை அழைத்து, மழை காலங்களில் மழைநீர் செல்லும் வழியை தடுக்கும் வகையில் கிடக்கும் கட்டுமான பொருட்களை அகற்றும்படி உத்தரவிட்டார். மேலும் அந்த ஆய்வின் போது வாய்க்கால்களில் கழிவுநீர் செல்ல முடியாமல் அடைத்து இருந்த குப்பைகளை அகற்றவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
பின்னர் அங்கிருந்து வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர்கள் சுதாகர், கந்தசாமி, பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு அதிகாரிகள், மலேரியா மற்றும் பைலேரியா துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.